ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை
காபூல் பிரீமியர் லீக்கின் (KPL) 2வது பதிப்பின் போது ஏசிபி மற்றும் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் இஹ்சானுல்லா ஜனத் ( Ihsanullah Janat) அனைத்து வகையான கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற செல்வாக்கு அல்லது போட்டியின் முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது வேறு எந்த அம்சத்தையும் சரிசெய்வதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய ஐசிசி ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 2.1.1ஐ மீறியதற்காக ஜனத் குற்றவாளியாக கண்டறியப்படடுள்ளார்.
விசாரணைகள்
இந்த விதி மீறலினால், கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனத் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதுடன், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஏசிபி ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) மேலும் மூன்று வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களின் குற்றத்தை உறுதிப்படுத்திய பின்னர் இது தொடர்பான முடிவுகள் எட்டப்பட்டு, இஹ்சானுல்லா ஜனத் மீதான தடை இந்த அறிக்கை வெளியானவுடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri