ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் பலி
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சில அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவித்துள்ளதுடன்,காபூல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான், இறந்தவர்களின் எண்ணிக்கை 5 என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் 20 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் தகவல் அமைச்சகத்தின் அதிகாரி உஸ்தாத் ஃபரீதுன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சுக்குள் நுழைய குண்டுதாரி திட்டம்
வெளிவிவகார அமைச்சுக்குள் நுழைய குண்டுதாரி திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், உத்தியோகபூர்வ ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட பகுதியில், இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் 9 பேர் அமைச்சகத்திற்கு வெளியே வீதியில் கிடப்பதை காண முடிந்துள்ளது.
எந்த குழுவும் சம்பவத்துக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை. பல அமைச்சகங்களைக் கொண்ட, தெருவில் சோதனைச் சாவடிகளால் சூழப்பட்ட பலத்த பாதுகாப்புப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது துருக்கி, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இப்பகுதியில் தூதரகங்களைக் கொண்டுள்ளன.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri