கனடாவிலுள்ள இந்திய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அங்குள்ள அனைத்து இந்திய நாட்டவர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்திய இந்திய தூதுவர் ஒருவரை வெளியேற்றியமை தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாட்டிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் தூதரக ஜெனரல் கனடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்.
இணையதள முறைப்பாடு
கனடாவில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதால், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் அல்லது டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களில் அந்தந்த இணையதளங்கள் madad.gov.in மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏதேனும் அவசரநிலை அல்லது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்பட்டால், உயர் ஸ்தானிகராலயம் மற்றும் துணைத் தூதரகங்கள் கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுடன் தொடர்பு கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.