எச்சரிக்கை அறிவிப்புகளில் அவதானம் செலுத்தவும்..! சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
பொறுமையுடன் வாகனங்களை செலுத்தவும்
சீரற்ற வானிலை காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச்செய்து பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேக எல்லையை பேணி வாகனங்களை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், இரு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணுமாறும், திடீரென பிரேக் பயன்படுத்தும் போது வாகனம் ஆபத்தான முறையில் வழுக்கிச் செல்லக்கூடும் என்பதால் விழிப்புடன் வாகனங்களை செலுத்துமாறும் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, நிலவும் சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொண்டு மிகுந்த பொறுமையுடன் அதிவேக சாலைகளை பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.