கொழும்பு வான் பரப்பில் சாகசம் நிகழ்த்திய விமானங்கள்
இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமான சாகச நிகழ்வுகள் இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து கொழும்பு காலிமுகத்திடலில் விமானப் படையினரின் விமான சாகசங்கள் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் கொழும்பு நகரை சுற்றிப் பறந்து விமான சாகசத்தை ஆரம்பித்து வைத்ததுடன், 70 வருட பெருமை மற்றும் வலிமையையும் வெளிகாட்டியுள்ளது.
கொழும்பு வான் பரப்பில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. இந்த விமான சாகசத்தில் 23 இந்திய விமானங்கள் பங்கேற்றிருந்ததுடன், காலி முகத்திடலிற்கு மேலான வான் பரப்பில் சூரிய கிரண் சாகச அணியின் 9 விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தியுள்ளன.
இந்த விமான சாகசத்தை நாளையும் (04) நாளை மறுதினமும் (05) மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை காலி முகத்திடலின் வான் பரப்பில் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
