காலத்தின் தேவைக்கருதியே படிப்பை முதன்மைப்படுத்தினேன்: கணித பிரிவில் சாதித்த மாணவன்
"நாங்கள் கோவிட்டை ஒரு காரணமாக காட்டி எங்களது உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சொல்ல முடியாது எனவே காலத்தின் தேவையை உணர்ந்து படித்தேன் என கொழும்பு இந்து கல்லூரி மாணவன் துவாரகேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை மாணவன் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் மாணவன் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் பேரிடர்
கோவிட் பேரிடர் எங்களுக்கு இருந்த மிகப் பெரிய பிரச்சினையாகும். அதனால் நாங்கள் நிகழ்நிலையில் படிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது.
இதனால் எங்களுக்கு மன அழுத்தங்கள் இருந்தது. ஆனால் நாங்கள் கோவிட்டை ஒரு காரணமாக காட்டி எங்களது உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சொல்ல முடியாது எனவே காலத்தின் தேவையை உணர்ந்து படித்தோம்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு இந்து கல்லூரி பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
எமது பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் கல்வி துறையிலும், விளையாட்டு துறையிலும், ஏனைய இணை பாடவிதான செயற்பாடுகளிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



