திடீர் சுகயீனம்: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக்கைதிகள்
திடீர் சுகயீனம் காரணமாக மாத்தறை சிறைச்சாலையில் எட்டு கைதிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு நோய் பரவுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சிறை அதிகாரிகள், சிறைக்குள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
சுகாதார பரிந்துரைகள்
இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுக்கமைய மாத்தறை சிறைச்சாலைக்கு தண்டனையின் நிமித்தம் அழைத்து வரப்படுகின்றவர்கள், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுகாதார பரிந்துரைகளை கடைபிடிக்கும் வகையில், பார்வையாளர் அணுகலை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |