கல்வியியல் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் அனுமதி குறித்து அறிவிப்பு
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் அனுமதிக்கும் செயற்பாடு அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்வியொன்றுக்குப் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கல்வியியல் கல்லூரிகளுக்கான பயிலுனர்களாக இணைந்து கொள்ள சுமார் 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
23 ஆயிரம் பேர் ஆசிரிய சேவை
அவர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து அனுமதி வழங்கும் செயற்பாடு அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளது.
@tamilwinnews கல்வியியல் கல்லூரிகளுக்கான பயிலுனர்கள் அனுமதி குறித்து அறிவிப்பு #lankasrinewss #Tamilwinnews #Srilanka #Collegeofeducation ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
அதே போன்று கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளை முடித்துக் கொண்ட 4160 பேர் விரைவில் வெளியேறவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக விரைவில் 23 ஆயிரம் பேர் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
