முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கக்கோரும் மனு மீதான மேலதிக விசாரணையை ஜூன் 08 ஆம் திகதி வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
அத்துடன் பிரதிவாதிகள் அதே நாளில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
முன்னதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு அதிகாரிகள் இன்று 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி மனு மீதான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியிருந்தது.
12 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரச ஊழியர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், சிதத் வெத்தமுனி, மைக்கேல் திஸ்ஸெரா, மற்றும் முன்னாள் நிர்வாகிகள் விஜய மலலசேகர, குஷில் குணசேகர, சோமசுந்தரம் ஸ்கந்தகுமார், அனா புஞ்சீஹேவா மற்றும் ரியென்சி விஜெதிலக்க ஆகியோர் அடங்குகிறார்கள்.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan