வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற படுகொலை வழக்கு ஒத்திவைப்பு
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றையதினம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணையில் கடந்த வாரம் நகர்தல் பத்திரம் மூலம் மன்றுக்கு எடுத்துரைக்கப்பட்டதுக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட தினம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் தான் 1வது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகச் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்திருந்தர்.
இந்த நிலையில் இன்றையதினம் எந்த இடத்திலிருந்து அந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக பொலிஸாரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனக் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சாட்சி ஒருவரையும் இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நகரத்தல் பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களை இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இம்மாதம் 15ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளதுடன், கைது
செய்யப்பட்டுள்ள மெய் பாதுகாவலருக்கு மேலும் 15 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.



