ரவிகரன் எம்.பியால் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் ஒத்திவைப்பு பிரரேணை முன்வைப்பு
வடக்கு மாகாண கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து, கடற்றொழிலாளர்களை நிம்மதியாக வாழவிடுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த பிரேரணை நேற்றையதினம்(22.02.2025) நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வழிமொழிந்து கருத்துத் தெரிவித்தார்.
பதிலளித்த அமைச்சர்
அத்துடன், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் இந்தப் பிரேரணையை முன்வைத்தமைக்கு ரவிகரனுக்கு நன்றி தெரிவித்து ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.
மேலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பதிலளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |