உலக வங்கியின் தெற்காசிய துணைத் தலைவரை சந்தித்த ரணில்
உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (17.07.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமான தனியார் முதலீட்டை அதிகரிப்பதற்காக கடன் மற்றும் சீர்திருத்தங்கள் என்பவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
டுவிட்டர் தளத்தில் பதிவு
இது குறித்து உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மாதங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் அதற்கு ஆதரவளிப்பதற்கு உலக வங்கி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலக வங்கியின் தெற்காசியாவுக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட தரப்பினர் தனியார் துறையினருடனும் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மார்ட்டின் ரைசர் ஆதரவு
சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் கொள்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக மார்ட்டின் ரைசர் மேலும் தெரிவித்துள்ளார்.
Pleased to meet the President of #SriLanka, @RW_UNP, today and discuss progress on debt and reforms to boost private investment vital to the country's economic recovery. The months ahead are critical, and the @WorldBank stands ready to support. pic.twitter.com/QAIVLU5gOk
— Martin Raiser (@MartinRaiser) July 17, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
