வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசு (Video)

Vavuniya Sri Lanka Sri Lankan political crisis
By Theepan Mar 28, 2023 04:35 AM GMT
Report

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (27.03.2023) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காடையர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்பாடானது முற்று முழுதாக மத பிரிவினைவாதத்தை இங்குத் தூண்டி அதில் குளிர்காய எடுக்கப்படுகின்ற ஒரு அரசியல் கலந்த நடவடிக்கையாகவே நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய நபர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.


தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

எங்களைப் பொறுத்த வரையில் இதற்குப் பின்னணியில் அரசாங்கமும் அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கக்கூடிய இராணுவ கட்டமைப்புகளும் இதற்குத் துணை இருப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம். இந்த சம்பவத்துக்கு எங்களுடைய வன்மையான கண்டனங்களை நாங்கள் பதிவு செய்கின்றோம்.

இந்த நாடு மத சகிப்புத்தன்மையற்ற திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைக் குறிப்பாக இது எடுத்துக்காட்டுகின்றது. எங்களைப் பொறுத்தவரையில் இது எங்களுடைய பண்பாடுகளைச் சிதைத்து அழிக்கின்ற, எங்களுடைய கட்டமைப்புகளைச் சிதைத்து அழிக்கின்ற ஒரு இன அழிப்பின் அங்கமாகத் தான் இதனைப் பார்க்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனோடு தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் அந்த இடத்திலேயே ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

இந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கின்ற பகுதி முழுக்க முழுக்க இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டுக்குள் உயர் பாதுகாப்பு வலையம் போன்று காட்சி தருகின்ற ஒரு பிரதேசமாக இருக்கின்றது. அதைவிட தொல்லியல் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ், கட்டுப்பாட்டின் கீழ் இந்த பிரதேசம் இருக்கின்றது.

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசு (Video) | Adi Lingam Was Broken On Vedukunari Hill

சமூகம் வெளிப்படுத்த வேண்டும்

இந்த சந்தர்ப்பத்திலே இதை வேற யாரும் ஒரு சாதாரண பொது மகனால் செய்து விட முடியாது. ஆகவே இந்த சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. இந்த விடையத்தில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு தமிழ் மக்களுடைய பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்துவதற்குக் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினால் வவுனியாவில் எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

மீண்டும் எங்களுடைய பண்பாடுகள், எங்களுடைய வரலாறுகள் சிதைக்கப்படாதவாறு ஒரு தடுப்பை நாங்கள் போட வேண்டுமாக இருந்தால் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக மிகக் காத்திரமான பிரதிபலிப்பை எங்களுடைய சமூகம் வெளிப்படுத்த வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் அன்போடும் உரிமையோடும் எங்களுடைய மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்து சமய தொண்டர் சபை கண்டனம்...!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும் சிவலிங்கம் காணாமல் செய்யப்பட்ட செயலையும் இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும்,உடனடியாக இச் செயலுக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிவலிங்கமும் சிலைகளும் மீள நிறுவப்பட வேண்டும்.

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசு (Video) | Adi Lingam Was Broken On Vedukunari Hill

ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்குப் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றி வைத்த எட்டு அடி உயரமான சூலம் காணாமல் ஆக்கப்பட்டது தொடர் பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய ஊறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசு அணுகித் தீர்வு காண வேண்டும்.

அத்துடன், ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்ப தகாத செயற்பாடுகள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என்றும் தமிழ்ச் சைவர்களின் மனதை ஆழமாகப் பாதித்தது வருகின்றது. இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சைவபெரியார்கள், செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிக்காட்ட வலியுறுத்துகின்றோம் என்றும் இலங்கை இந்து சமயத் தொண்டர் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US