வவுனியா - வெடுக்குநாறி மலை விவகாரம்: வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறும் அனந்தி!

Sri Lankan political crisis
By Kajinthan Mar 27, 2023 06:59 AM GMT
Report

நாங்கள் செல்ல முடியாத வவுனியா - வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட வகையில் எமது வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதை இந்து என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (26.03.2023) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் காலங்காலமாகத் தமிழர்களுடைய சிவன் ஆலயமாக இருந்திருக்கின்றது.

வவுனியா - வெடுக்குநாறி மலை விவகாரம்: வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறும் அனந்தி! | Vedukunari Hill Affair

நெடுந்தீவு - வெடியரசன் கோட்டை

அந்த ஆலயத்தைப் பரம்பரை பரம்பரையாக வழங்கியவர்கள் இன்றைக்கும் அந்த ஆலயத்தின் அருகில் வசிக்கின்றார்கள். ஆனால், அங்குத் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தவர்களை தொல்லியல் திணைக்களம் தனது சொல்வாக்கினூடாக அந்த ஆலயத்தில் எவரும் செல்ல முடியாது அல்லது மலையேற முடியாது என நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் நாங்களும் அந்த ஆலயத்திற்குச் சென்று வணங்கி உள்ளோம். ஆனால் தற்போது அங்கு இருந்த சிவலிங்கம் இடித்து வீசப்பட்டுள்ளதுடன், சூலங்களும் பிடுங்கி வேறு இடத்தில் வீசப்பட்டுள்ளன.

நாங்கள் செல்ல முடியாத வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட வகையில் எமது வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதை இந்து என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேவேளை, குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்த இடத்தில் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி பௌத்தர்கள் விகாரையை கட்டியுள்ளார்கள்.

அங்கு எந்த விதமான செயற்பாடுகளையும் செய்ய முடியாத நிலையில் நாம் உள்ளோம். அதே நேரத்தில், அங்கு தான் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி பிக்கு ஒருவருடைய உடலையும் தகனம் செய்திருந்தார்கள். அதே நேரத்தில் நாவற்குழியில் ஒரு விகாரையை கட்டி அந்த விகாரையை இராணுவ தளபதி சவேந்திரசில்வா திறந்து வைத்ததையும் ஊடகங்கள் வாயிலாகப் பார்த்திருந்தோம்.

காங்கேசன்துறை குரு வீதியில் பௌத்தர்கள் எவருமே இல்லாத இடத்தில் ஒரு விகாரையை கட்டியுள்ளார்கள். மக்கள் அனைவரையும் அடித்து விரட்டி விட்டு அங்கு அந்த விகாரையை கட்டியிருக்கிறார்கள். அத்துடன், நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டை தமிழர்களது பூர்வீகம் என்று பேசிக் கொண்டிருக்கின்ற வேளையில் அது பௌத்த இடம் எனக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை நாங்கள் சமூக ஊடகங்கள் ஊடாக பார்த்திருக்கின்றோம்.

வவுனியா - வெடுக்குநாறி மலை விவகாரம்: வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறும் அனந்தி! | Vedukunari Hill Affair

உலகத் தமிழர்கள் 

யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகியும் இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வை நாங்கள் பெற்றுத் தருமாறு கோருகின்றோம் ஆனால் அது வழங்கப்படவில்லை. விடுதலைப் போராட்டத்தை அமெரிக்கா, இந்தியா, பிருத்தானியா ஆகிய நாடுகள் அழித்தன. 2020ஆம் ஆண்டில் சம்பந்தர் கூட பாராளுமன்ற இதனை ஆக்ரோஷமாகக் கூறியிருந்தார்.

இதுவரை நமக்கான தீர்வு பெறாமல் இருக்கின்ற நிலங்களை அபகரிக்கின்ற செயற்பாடு தான் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தான் எமது அரசியல் தலைமைகள் எமக்கான ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்ற நோக்கத்தில் மென்போக்கான பயணத்தை மேற்கொள்கின்றனர். இன்றைக்கு நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த இடத்தில் கூட நாளைக்கு ஒரு விகாரை வந்துவிடும். அது கூட ஒரு ஆச்சரியமான செயல்பாடு இல்லை.

IMF இல் கடனை வாங்குகின்ற போதும் எமது இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என்று கூறினாலும், இன்றைக்கு ஐக்கிய நாடுகள் சபை நடந்து கொண்டிருக்கின்ற போதும் நாங்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கின்றோம் எனப் பேசிக்கொண்டு இருக்கின்ற வேளை இவ்வாறு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் உலகத் தமிழர்கள் அனைவரும் விழித்துக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US