அரச புலனாய்வு சேவையின் கூடுதல் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்க திட்டம்?
அரச புலனாய்வு சேவையின் கூடுதல் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் நாட்டின் அரச புலனாய்வு சேவையின் கூடுதல் அதிகாரங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் காணப்பட்டது.
எனினும், எதிர்வரும் காலங்களில் அரச புலனாய்வு சேவையின் அதிகாரங்களை இராணுவத்திற்கு வழங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்ய பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் பதவி பணிப்பாளர் நாயகம் என்ற பதவியாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிப்பாளர் நாயகத்தின் கீழ் மூன்று பிரதானிகளை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் பதவி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதும் படையதிகாரி ஒருவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் முப்படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கக்கூடிய வகையில் அரச புலனாய்வு சேவையில் மறுசீரமைப்புக்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri