திருச்சி - இலங்கை இடையே கூடுதல் விமான சேவை ஆரம்பம்
திருச்சி (Trichy) - இலங்கை (Sri Lanka) இடையே கூடுதல் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய், சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில் இலங்கை தவிர ஏனைய நாடுகளுக்கு தினசரி 1 முதல் 4 சேவைகள் உள்ளன. ஆனால் இலங்கைக்கு விமானங்களை இயக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தினசரி 1 என்ற வகையில் வாரந்தோறும் 7 சேவைகளை மட்டுமே இயக்கி வந்துள்ளது.
வாரத்தில் 4 நாட்கள்
அதன்படி வாரத்தில் செவ்வாய், புதன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 10.10 இற்கு மீண்டும் இலங்கை செல்லும்.
இதேபோல திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3.05 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் விமானம் 4.10-க்கு புறப்பட்டு செல்கிறது.
இந்நிலையில் வியாழக்கிழமைகளில் காலையும் இலங்கைக்கு கூடுதல் விமானச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக திருச்சியில் நேற்றுமுன்தினம் (31) நடந்த விழாவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் உள்ளிட்டோர் கூடுதல் சேவையைத் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 11 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
