உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 40 மில்லியன் டொலர் கூடுதல் உதவி
இலங்கையின் 7 மாவட்டங்களில் நீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்துவதற்காக இலங்கைக்கு 40 மில்லியன் டொலர் கூடுதல் நிதியுதவி அளிக்க உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டம் மேல், தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் செயற்படுத்தப்படவுள்ளது.
இலங்கையின் கிராமப்புற, மற்றும் பெருந்தோட்டப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதற்காக 1998 முதல் உலக வங்கி நிதியளித்து வருக்கிறது.
அதன் அடிப்படையில் இது மூன்றாவது நீர் துறை திட்டமாகும். இந்த திட்டம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 4.7 மில்லியன் மக்களை உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கடவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், புதிய நீர் வழங்கல் அமைப்புகள், தற்போதுள்ள நீர் வழங்கல் அமைப்புகளின் சீர்திருத்தம், வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் வழங்கல் என்பன அடங்குகின்றன.
COVID-19 தொற்றுநோயை இலங்கை எதிர்த்துப் போராடுவதால், ஆரோக்கியமான தேசத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பான நீர் வழங்கல் மற்றும் சுகாதார அமைப்புகளை உருவாக்குவது மிக முக்கியமானது ”என்று மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கி நாட்டின் இயக்குநர் ஃபரிஸ் ஹதாத்-செர்வோஸ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் ஏற்கனவே பதுள்ளை , நுவரஎலிய, கேகாலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி,
இரத்னபுரி மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் சுமார் 310,000 மக்களுக்கு
நன்மையளித்துள்ளது.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam