இந்திய அதானியின் காற்றாலை திட்டம்: புதிய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இலங்கையின் புதிய அரசாங்கம், இந்திய அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாகக் கூறியுள்ளது.
இது வெளிநாடுகளில், தமது திட்டங்களை விரிவாக்க முயலும் இந்திய அதானி கூட்டுக்கு புதிய தடையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் திட்டங்களில், முந்தைய அரசாங்கம் வழங்கிய மின்சார விலை ஒப்புதல் ஒரு பிரச்சினையாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி இறையாண்மை
எனினும், நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், புதிய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்திற்கு புதிய தோற்றத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க, தமது தேர்தல் பிரசாரத்தின் போது, அதானியின் இந்தத் திட்டத்தை இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியதுடன், அதை இரத்து செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில், ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் தலைமையிலான அதானி குழு, இலங்கையில் பல உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க விரும்புவதால், ஒப்பந்தத்திற்கு எதிரான எந்த சவாலும் கௌதம் அதானியின் இலட்சியங்களுக்கு அடியாக இருக்கும் என்று ப்ளும்பேர்க் குறிப்பிட்டுள்ளது.
துறைமுக விரிவாக்கம்
இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் கொழும்பு கொள்கலன் - கப்பல் துறைமுகத்தை விரிவாக்குவதும் திட்டமும் உள்ளடங்கும் என்று அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் கருத்து கேட்டு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. அத்துடன் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு அதானி குழுமத்தின் பிரதிநிதியும் உடனடியாக பதில் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி, இலங்கையில் இரண்டு காற்றாலை திட்டங்களை முன்மொழிந்துள்ளார் - ஒன்று மன்னாரிலும் இரண்டாவது மற்றும் பூநகரியிலும் செயற்படவுள்ளன.
இதில், மன்னாரில் செயற்படுத்தப்படவுள்ள திட்டம், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் என்பது தொடர்பாக சுற்றுச்சூழல் குழுக்களிடமிருந்து நீதிமன்ற சவால்களை எதிர்கொள்கிறது. அத்துடன் இரண்டு திட்டங்களும் வெளிப்படைத்தன்மை இல்லாதது பற்றிய முறைப்பாடுகளையும் எதிர்கொள்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
