இலங்கையில் இருந்து முதலீடுகள் வெளியில் செல்வது நல்ல அறிகுறியல்ல: சஜித் கட்சியின் இளைஞர் பிரிவு
இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திலிருந்து விலகும் அதானி கிரீன் எனர்ஜியின் முடிவு நாட்டிற்கு நல்ல அறிகுறி அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான முதலீடுகள் வெளியே செல்வது அல்ல, உள்ளே வருவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி மன்னாரில் உள்ள எரிசக்தி திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்தது.
அதானியின் அறிவிப்பு
அத்துடன், கடந்த வாரம் இலங்கையில் செயல்பாடுகளை நிறுத்துவதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா அறிவித்ததைத் தொடர்ந்தே அதானியின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து நிறுவனங்கள் வெளியேறும்போது பொருளாதார மன்றங்களில் உரை நிகழ்த்துவது அர்த்தமற்றது என்று சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
