காதர் மஸ்தானின் கடமைகள் பொறுப்பேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட செல்வம் அடைக்கலநாதன்
கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், அமைச்சின் அலுவலகத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிகழ்வில் அடைக்கலநாதன் பங்கேற்பு
இந்நிலையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரின் கடமையேற்பு நிகழ்வில் அரசாங்க தரப்பினர் பலரும் கலந்து கொண்டதுடன் வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டார்.

மேலும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான முசரப், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் அமைச்சின் செயலாளர் உட்பட உயர் அதிகாரிகள், அரசாங்க தரப்பினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்
கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.



வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan