தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையமாட்டோம்: செல்வம் அடைக்கலநாதன் கருத்து

Vavuniya Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Shan Aug 23, 2022 08:18 AM GMT
Report

எங்களது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாம் ஒருபோதும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு தரமாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஏற்கனவே நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர்கள் கைது


தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் சர்வகட்சி அரசாங்கத்தில்  இணையமாட்டோம்: செல்வம் அடைக்கலநாதன் கருத்து | Selvam Adhikalanathan Comments Media

தொடர்ச்சியாக பயமுறுத்தலும் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை வைத்துகொண்டு பல இளைஞர்களை கைது செய்வதும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

எங்களை பொறுத்தமட்டில் ஜனாதிபதிக்கும் கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றோம். பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

முக்கியமான விடயங்கள் வருகின்ற போது நிச்சயமாக நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முடியாது என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

தொடர்ச்சியாக தமிழர் தரப்பிலே கைது செய்யப்படுகின்ற நிலைமைகளும் கூடுதலாகவே காணப்படுகின்றது. இந்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாட்டை ஜனாதிபதி செய்ய வேண்டும். இல்லையென்றால், எங்களுடைய ஆதரவு இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் இருக்காது.

அரசியல் கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை

தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் சர்வகட்சி அரசாங்கத்தில்  இணையமாட்டோம்: செல்வம் அடைக்கலநாதன் கருத்து | Selvam Adhikalanathan Comments Media

எங்களை பொறுத்தமட்டிலே எங்களுடைய கோரிக்கையில் முதலாவது அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற வாய்ப்புக்குள் வருகின்ற நல்ல விடயங்களை ஆதரித்து இடைஞ்சலாக வருகின்ற விடயங்களை எதிர்க்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவோம்.

ஆனால் எங்களுடைய கோரிக்கைகளிலே படிப்படியாக நிறைவேற்றுகின்ற செயற்பாடுகள் வர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சிந்துத்துதான் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US