கெஹல்பத்தர பத்மேவின் பின்னணியில் பிரபல நடிகைகள்: மறைக்கப்பட்ட கருப்பு பணம்
கெஹல்பத்தர பத்மேவிற்கு பாரிய துப்பாக்கி கடத்தலில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகைகள் மூலம் அவரது கருப்பு பணம் மறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடிகைகள் பல்வேறு முதலீடுகளுக்கு அந்த பணத்தைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பில் தீவிர விசாரணைகள் நடந்து வருகின்றன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே, துப்பாக்கி கடத்தலில் ஈடுபட்டதாக சமீபத்தில் தகவல் கிடைத்துள்ளது.

தொழிலதிபர் கைது
அதன்படி, விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், மினுவங்கொட பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் நேற்று (01) காலை ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவருக்கு கெஹல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய தொழிலதிபர், ஹீனட்டியன மகேஷ் என்ற நபரிடமிருந்து தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு அவரை சுட்டுக் கொல்ல முயன்றதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கெஹல்பத்தர பத்மேவிடம் இருந்து 13 உயிருள்ள தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கியை வாங்கியதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
இதற்காக முதலில் பத்மே ரூ.500,000 கேட்டதாகவும், பின்னர் விலையை ரூ.350,000 ஆக குறைத்ததாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதற்கமைய, சந்தேகநபரை 48 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரபல நடிகைகளிடம் வாக்குமூலம் பதிவு
இதற்கிடையில், டுபாயில் கெஹல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்த ஆறு பிரபல நடிகைகளில் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு கூறியுள்ளது.
கெஹல்பத்தர பத்மே நடிகைகளுக்கு பணம் கொடுத்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகைகள் பத்மேவின் கருப்பு பணத்தை மறைத்தார்களா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan