யாழை வந்தடைந்த தமன்னா உள்ளிட்ட தென்னிந்திய திரை பிரபலங்கள்
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் உள்ளிட்டவர்கள் இன்று(09) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தென்னிந்திய கலைஞர்கள்
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு இன்று(09)யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
