குற்றத்தை ஒப்புக்கொண்ட நடிகை: நீதிமன்றம் விதித்த அபராதம்
அனுமதிப் பத்திரமின்றி பாதுகாப்பு சேவை நிலையம் ஒன்றை நடத்தி வந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு(Semini Iddamalgoda) 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பதில் நீதவான் பீ.டி.பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமான முறைப்பாட்டை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால், நீதிமன்றம் சேமினியை கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதுடன் பிடியாணை திரும்ப பெற நீதிமன்றம் தீர்மானித்தது. குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கையை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர், பதில் நீதவான், அதனை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நடிகை சேமினிக்கு மொழிப்பெயர்த்து விளக்குமாறு மொழிப்பெயர்ப்பாளர் சிந்தக உஹனோவிவுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனையடுத்து அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை நடிகை ஒப்புக்கொண்டார். இதனடிப்படையில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
