நடிகர் தர்ஷன் தர்மராஜ் கௌரவமானவர்: சிங்கள நடிகையின் பதிவு
திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் சம்பந்தமான பிரபல சிங்கள நடிகை அனோமா ஜனாதரி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
சில திரைப்படங்களில் நாங்கள் இணைந்து நடித்தோம். அனைத்து படங்களிலும் வயது வந்தவர்களுக்கு உகந்த காட்சிகள் இருந்தன. அவர் நடிக்கும் போது ஆச்சரியப்படும் வகையில் ஒத்துழைப்புகளை வழங்கும் நடிகர்.
தர்ஷன் தர்மராஜ் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகராக வளர விரும்பினார்
சிங்கள நடிகர்களுடன் நடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் அவர்கள் தவறான யோசனைகளை முன்வைப்பார்கள்.60 வயதுக்கும் மேற்பட்ட சில சிங்கள நடிகர்களிடம் கூட தப்பிக்க முடியாது.
தர்ஷன் தர்மராஜ் இளம் நடிகர் என்ற வகையில் என்னை மரியாதையுடன் கௌரவமாக நடத்தினார். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட நடிகராக வளர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தன.
எனினும் அவர் இலங்கையின் திரைப்படத்துறையை விரும்பினார். நானும் அவரும் நடித்த சுனாமி திரைப்படத்திற்கு விருது கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் அவர் இருந்தார்.
41 வயது என்பது மரணிக்கும் வயதல்ல. எனினும் அவர் மதுபானங்கள், புகைத்தல் போன்றவற்றை மிகுதியாக பயன்படுத்தும் நடிகர்களும் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார் என அனோமா ஜனாதரி தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
தர்ஷன் தர்மராஜ் வித்துக்கள் என்ற பெயரில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் படமாக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் முதலாம் சங்கலியன் மன்னனாக நடித்துள்ளார். இந்த திரைப்பட்டம் 1500 ஆம் ஆண்டுகளில் மன்னாரில் நடந்த படுகொலை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. வித்துக்கள் என்ற இந்த திரைப்படம் இன்னும் 5 நாட்களில் நாடு முழுவதும் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
