கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை(Video)
மட்டக்களப்பில் கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளாத மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் ஊடாகவும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இன்றையதினம் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத மாணவர்களுக்காகத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியைப்
பெற்றுக்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
