முல்லைத்தீவில் தென்னை செய்கையினை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகள்
முன்னெடுப்பு ஐனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக தென்னை முக்கோண வலயத்துக்கான தென்னங் கன்றும் பராமரிப்பு செலவீனமும் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்னைப் பயிர் செயற்கையை அதிகரிக்கும் நோக்கில் 2026 ம் ஆண்டுக்கான தென்னை பயிர் செயற்கையை ஆரம்பிப்பதற்காக சுதந்திரபுர கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு 35 பயனாளிகளுக்கு 1ஏக்கருக்கு 30000 ரூபாய் வீதம் பராமரிப்பு நன்கொடையாகவும் 5500 தென்னங்கன்றுகளையும் தென்னை பயிர் செயகை சபையின் தலைவர் சுனிமல் ஜெயகொடியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று(19) சுதந்திரபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தென்னை பயிற்செய்கை அதிகார சபையின் பொது முகாமையாளர் அத்தில விசயசிங்கசவும் பிரதி பொது முகாமையாளர் N S ஜெயலத். உதவி பொது முகாமையாளர் தே.வைகுந்தன் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் சென்சிகா ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிட்டத்தக்கது




