வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிரடியாக இடமாற்றம்
வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நாளை (20) முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களே இடமாற்றப்படுகின்றனர்.
அதன்படி சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாண சபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரவை செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, பதில் பிரதி பிரதம செயலாளராகவும் பணியாற்றி வந்த, பற்றிக் ரஞ்சன் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராகச் செயற்படுவார்.
ஆளுநரின் செயலாளராகத் தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவித்தல் இன்று (19) மாலையே தொலைநகல் மூலம்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri