எதிர்வரும் காலத்தில் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
எதிர்வரும் காலத்தில் நடைபெறும் அனைத்து திருமண நிகழ்வுகளும் தீவிர பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்படுகின்ற நிகழ்வுகள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தற்போது தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு இணங்க திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விதிகளை மீறி சில இடங்களில் அதிக மக்கள் தொகையுடன் உரிய கட்டுப்பாடுகளும் அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படாமல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
எனவே இவ்வாறான நிகழ்வுகள் குறித்து தீவிரமாக கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
