நீக்கப்படும் மகிந்தவின் பெயர்! அரசாங்கத்தின் உறுதியான அறிவிப்பு
ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் பெயர் நீக்கப்படும் என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே(sunil kumara Gamage) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும், அதன் கட்டுமானத்தில் பெரும் தொகை வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், வளாகம் இப்போது பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மோசடி மற்றும் ஊழல்
இதன்படி மகிந்த ராசபக்சவின் பெயரில் மைதானம் காணப்பட்டால், எந்த தனியார் துறை முதலீட்டாளர்களும், இணைந்து விளையாட்டு வளாகத்தை நடத்துவதற்கு பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுமத்தப்படும் குற்றச்சாட்டு
மேலும் செய்யப்பட்ட பணிகள் ராஜபக்சர்களுக்கு பொருத்தமாக இருந்தாலும், அது நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பொருந்தாது என்றும் சுனில் குமார கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு விளையாட்டு வளாகத்திற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு கொள்கலன்களில் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஜெனரேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த விளையாட்டு வளாகத்தில் உள்ள பொருட்களின் பட்டியல் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |