குருக்கள்மட இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை : சாணக்கியன் தெரிவிப்பு
குருக்கள்மடம் பாடசாலை கட்டடத்தில் இயங்கி வருகின்ற இராணுவ முகாம் அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மைதான விஸ்தரிப்பு
மேலும் தெரிவிக்கையில், குருக்கள்மடம் இராணுவ முகாமை அகற்றுவது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் மூன்று தடவைகள் இது தொடர்பில் பேசியிருக்கின்றோம்.
இங்கு அமைந்திருக்கின்ற இராணுவத்தினருடன் எனக்கு எதுவித கோபங்களும் இல்லை. குருக்கள்மடம் கிராமத்திலே இருக்கின்ற மைதானத்தை விஸ்தரிக்க வேண்டும்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி கடந்த பாதுகாப்பு அமைச்சு தொடர்பான நடைபெற்ற கூட்டத்திலேயே உரையாடி இருக்கின்றார். அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற குருக்கள்மடம் இராணுவமுகாம், பாலையடிவட்டை இராணுவமுகாம், முறக்கொட்டாஞ்சேனை இராணுவமுகாம், காயங்கேணி இராணுவமுகாம் ஆகிய நான்கு இடங்களில் இருக்கின்ற ராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் ஒரு மாத காலம் இடைவெளி தருமாறு ஜனாதிபதியும் கேட்டிருக்கின்றார்.
இந்நிலையில் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.
எனினும் தாங்கள்தான் இராணுவ முகாம்களை அகற்றுவதற்காக குரல் கொடுத்ததாக பலர் வந்து தற்போது கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
அது எனக்கு பிரச்சினை இல்லை இது எவ்வாறு இருந்தாலும் இராணுவ முகாம் அகற்றப்பட்டால் போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



