இலங்கை மீதான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!
கோவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கையின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி உரிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக உரிய நாடுகளுடன் ராஜதந்திர அடிப்படையில் வெவ்வேறாக கலந்துரையாடப்பட்டவுள்ளது. சுற்றுலா ப
யணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும்போது ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri