சில பட்டாசுகளின் விற்பனையை தடுக்க நடவடிக்கை
சட்டவிரோதமான “சீனா பட்டாஸ்” மற்றும் “ஹக்க பட்டாஸ்” உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் போது, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
விசேட நடவடிக்கைகள்
இந்த வகை வெடிபொருட்கள் மனிதர்களும் விலங்குகளும் பலியாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால் அவர்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட தகவல்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வனவிலங்கு அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 2 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan