நடத்துனர் இல்லாத பேருந்துகளை இயக்க நடவடிக்கை
எதிர்காலத்தில் பேருந்து நடத்துனர்கள் இல்லாது பேருந்துகளை இயக்க தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்து பயணங்களுக்கான பயண அட்டையை எதிர்வரும் 27 ஆம் திகதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் பயணிகள் மீதி சில்லறை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக இருந்து வரும் சிக்கல் தீர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் திலும் அமுனுகம இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை மக்களை பாதிக்கக் கூடிய சுமை வண்டிகள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றின் கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
