இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வர வருகையையொட்டி, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 40 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கப்படுகின்றது.
இம்மாதம் 26, 29, 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் வழக்குகளை நடத்தி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை
இன்றும், நாளையும் நீதிமன்ற விடுமுறை என்பதால் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றப் பதிவாளர்கள் மூலம் இந்த விடயத்தை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த வழக்குக்கோவைகள் மற்றும் இதர பணிகளுக்கான நீதிமன்றின் ஏனைய பணியாளர்கள் உட்பட அனைவரையும் அழைப்பதில் தடை ஏற்பட்டால் இந்திய மீனவர்களின் விடுவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |