சுற்றுலாப் பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை வசதி
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில். இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
விசா பிரச்சினை
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காணப்பட்ட விசா பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு செயற்படுகின்றது.
எல்ல, காலி, சீகிரியா போன்ற பிரதான சுற்றுலாக் கவர்ச்சி மிகுந்த இடங்களின் அண்மையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலாத் தளங்களின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |