பாதாள உலக குற்றக் கும்பலுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் ஆகியோர் கொல்லப்பட்ட 11 சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு, நேரடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வழக்குக் கோப்பையும்
களுத்துறை சிறைச்சாலை பேருந்துத் தாக்குதலில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'சமயன்' கொல்லப்பட்டமை, கரந்தெனிய மருத்துவர் கொலை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் காவலில் இருந்த பொறியியலாளர் ஒருவரின் கொலை, 'கொஹுவல போபி கொலை,
பொலிஸ் சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட எல்பிட்டிய இரட்டைக் கொலை, போதை பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி நியோமல் ரங்கஜீவ மீதான கொலை முயற்சியின் போது ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டமை, ரத்கம கொலைகள் மற்றும் 'கணேமுல்ல சஞ்சீவ' மீது நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை ஆகியவை இந்த வழக்குகளில் அடங்கும்.
இந்த நிலையில், ஒவ்வொரு வழக்குக் கோப்பையும் மதிப்பாய்வு செய்ய சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஒரு விசேட குழு நியமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



