சுமார் 70 அரச அதிகாரிகள் மீது எடுக்கப்படவுள்ள கடுமையான நடவடிக்கை
நாட்டில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 அரச அதிகாரிகள் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இதுபோன்ற பல அதிகாரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள் நியமனம்
பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், முறைகேடான அதிகாரிகள் இனங்காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து நிர்வாகப் பணிகளுக்காக அதிகாரிகள் (செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள்) நியமிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
