வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற பாதாள உலக தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை!
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற பாதாள உலக தலைவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதால் இந்த பாதாள உலக தலைவர்களை கைது செய்வது தொடர்பில் இன்டர்போலுடன் கலந்தாலோசித்து தேவையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்ட அனைத்து பாதாள உலக உறுப்பினர்களும் விரைவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
பாதாள உலக உறுப்பினர்களின் பெயர்கள் இன்டர்போலில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாரள் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam