ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த அதிரடி தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட கட்சியிலிருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களினதும், கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவை, நீக்கி, அந்த பதவிக்கு திலங்க சுமத்திபாலவை நியமிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய குழுவின் ஏகமனதாக ஒப்புதல்

இந்த பதவிக்கு சுமதிபாலவின் பெயரை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளதுடன், கட்சியின் மத்திய குழுவும் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேன திலங்க சுமதிபாலவிடம் வழங்கியுள்ளதுடன்,திலங்க சுமதிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் ஆவார்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam