குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்! இலங்கை தூதரகம் எடுத்துள்ள நடவடிக்கை
குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 54 இலங்கை வீட்டுப்பணியாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடவடிக்கை
இந்நிலையில், நோய், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விசா காலாவதியானமை ஆகிய காரணங்களால் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்கள் தங்கள் பிரதேசங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்கியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
