நாடு முழுவதும் முதல் தடவையாக மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கை
நாடு முழுவதும் முதல் தடவையாக மதுவரித் திணைக்களம் முக்கிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது.
இந்த விடயத்தை மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தரம் தொடர்பில் பரிசோதனை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் தரம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
மதுபானங்களின் தரத்தை உரிய வகையில் பேணுமாறு கோபா குழு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது.
பெறப்படவுள்ள மாதிரிகள்
இந்த நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் விநியோக நிலையங்களில் மதுபானங்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
உரிய தரத்தை மீறும் மதுபானசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
