இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவின் முன்னணி கட்சியொன்று எடுத்துள்ள நடவடிக்கை!
காணாமல் போனவர்கள் குறித்து தகவலை வழங்கத் தவறிய இலங்கை அரசாங்கத்தை கண்டித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதுமாறு சமதா கட்சி சார்பாக ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இந்த குழுவின் தலைவராக அந்த கட்சியின் முதன்மை பொது செயலாளர் என்.ஏ.கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமதா கட்சியின் தமிழக தலைமை பொதுச் செயலாளர் சட்டத்தரணி மணிவண்ணன், தமிழக மாநில துணைத் தலைவர் சந்திரன், மேற்கு வங்கத்தின் சமதா கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீ கவுதம் தாஸ் ஆகியோரும் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு உடனடியாக செயல்பட சமதா கட்சியின் தேசிய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.