எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமென தகவல் வெளியாகியிருந்தமையினால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேவையாக எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை.
எரிபொருள் விலைச்சூத்திரத்தின் படி கடந்த 5ஆம் திகதி எரிபொருளின் விலைகள் குறையலாம் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் அவற்றை கொள்வனவு செய்து விநியோகிப்பதில் தயக்கம் காட்டியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,




