போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை (Video)
போதைப்பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் வகையில் பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பேருந்து நிலையம்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட தன்னார்வ அமைப்புக்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை இந் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் தன்னார்வ அமைப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
போதைப்பொருள் துஷ்பிரயோக தினம்
போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளதுணை,சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட 1927 என்கிற உடனடி இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தும் பதாகை திறந்து வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து பேரூந்துகளில் ஸடிக்கர்களை காட்சிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக ஆற்றுகை குழுவினரால் போதைப்பொருள் விழிப்புணர்வு வீதியோர நாடகமும் இடம்பெற்றது.
முற்றாக முடங்கும் இலங்கை! புதிய அறிவிப்பு வெளியானது |









கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
