தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜித்த ஹேரத்
அடிப்படை சம்பள சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அது தொடர்பான வாக்குறுதியை வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் (Vijitha Herath) தெர்வித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் போது, அதனை அடிப்படை சம்பளமாக வழங்குவதற்க்கு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருமாறு நாங்கள் அன்று தெரிவித்தோம்.அவ்வாறு இடம்பெற்றிருந்தால் எந்த கம்பனிக்கும் அதனை நிராகரிக்க முடியாது.
ஆயிரம் ரூபா வழங்கியே ஆகவேண்டும், ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு சம்பள நிர்வாகத்தில் திருத்தம் மேற்கொண்டது.அவ்வாறு செய்து சம்பள உயர்வு மேற்கொள்ளும்போது கம்பனிகளுக்கு நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியும் எனவும் நாங்கள் அன்று தெரிவித்திருந்தோம்.
ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது. அரசாங்கம் தெரிவித்த 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றதா ? குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு கீழ் இருக்கும் தோட்டங்களிலாவது இந்த 1000 ரூபா சம்பளம் வழங்கப்படுவதில்லை.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறுவதால், வழக்கும் முடியும் வரை 1000 ரூபா தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
அதனால் அடுத்த வருடத்தில் இருந்தாவது தொட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்குவதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் அடிப்படை சம்பள சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri