ஒலிம்பிக் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை! லக்ஸ்மன் கிரியல்ல
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற ராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்க விதிகளை மீறி ராஜாங்க அமைச்சர்கள் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளனர் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநபர்களிடமிருந்து ஏதேனும் உதவிகள் கிடைக்கப் பெற்றால் அது குறித்து நாடாளுமன்றிற்கு அறிவிக்க வேண்டுமென ஒழுக்க விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற அனுசரணை தொடர்பில் அறிவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கு இந்த விடயம் பற்றி குறிப்பிடாத காரணத்தினால் குறித்த ராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
நிதி நலன்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை ஏலத்தில் விட தயார் நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே பாதகமான சட்டமூலங்களையும் அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
