காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு

Parliament of Sri Lanka Tamil National Alliance Thavarasa Kalaiarasan
By Mayuri Nov 18, 2023 11:10 AM GMT
Report

சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை அத்துமீறி கையகப்படுத்தியவர்களிடமிருந்து பெற்று உரிய மக்களுக்கு தடையின்றி வழங்கி அம்மக்களுக்கு ஒரு நியாயத்தை வழங்க காணி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஒத்திவைப்புப் பிரேரணை

அடுத்த மாதம் முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

அடுத்த மாதம் முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் ஒத்திவைப்புப் பிரேரணையின் போது யுத்த சூழலில் பலவந்தமாக கைப்பற்றிய சம்மாந்துறை தொட்டாச்சுருங்கி நெற்செய்கைக் காணியினை உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக பிரேரணையினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு | Action By Minister Of Lands

இப்பிரேரணை தொடர்பில் காணி அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை இந்த விடயத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 கிராம சேவையாளர் பிரிவில் தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை யுத்த சூழலில் பலவந்தமாகக் கைப்பற்றிய பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்து இன்றுவரை அக்காணியினை உரியவர்களிடம் வழங்காது அத்துமீறி தொடர்ந்தும் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.   

இச்செயற்பாட்டை உடன் நிறுத்தி உரிய மக்களிடம் அக்காணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி விடயம் தொடர்பாக காணி அத்துமீறிப் பிடித்தவர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு காணியின் சொந்தக்காரர்களுக்கே காணி மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருந்தும் இக்கால கடட்டத்தில் நிலவிய போர்ச்சூழலினால் அம்மக்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்ததன் காரணமாக அந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

காணியினை மீள வழங்க தீர்மானம்

இருந்தும் இதன் பின்னர் இக்காணி தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் 2015.08.27ம் திகதி விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் 2016.11.04ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் காணி உத்தரவு பத்திரம் உடையவர்களுக்கு காணியினை மீள வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு | Action By Minister Of Lands

இவ்வாறு காணி உரித்துடையவர்களுக்கு அக்காணியினை வழங்குவதற்கு அனைத்து செயற்பாடுகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்றுவரை இம்மக்களின் காணியினைக் கொடுப்பதற்கு இக்காணிகளை கைப்பற்றியவர்களும் சில அரசியல்வாதிகளும் மறுதளித்த வண்ணமாகவே இருக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை அத்துமீறி கையகப்படுத்தியவர்களிடமிருந்து பெற்று உரிய மக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு இப்பிரேரணையை நான் முன்மொழிகின்றேன். இந்தத் தொட்டாச்சுருங்கி நெற்செய்கைக் காணியானது அங்குள்ள மக்களுக்கு கல்லோயாத் திட்டத்திலே வழங்கப்பட்ட காணியாகும்.

அவ்வாறு வழங்கப்பட்டதன் பிற்பாடு புத்தங்கலை என்ற பிரதேசத்தில் இருந்த தேரரும், இராணுவத்தினருமாக இணைந்து இந்த மக்களை திட்டமிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவைகள் இந்த இடங்களை தங்களுக்குத் தரவேண்டும் என்று கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு குறிப்பிட்டதைப் போன்று 2016ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலே நானும் கலந்துகொண்டிருந்தேன்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

மக்களின் ஆதங்கம்

அப்போது மாவடட்ட செயலாளராக துசித்த வனியசூரிய என்பவர் இருந்தார். அங்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளிடம் பூரணமான உத்தரவுப் பத்திரங்கள் இருந்தன. இக்காணிகளைக் கையகப்படுத்தியவர்களிடம் எந்த ஆவணமும் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் மக்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு | Action By Minister Of Lands

ஆனால் இதுவரைக்கும் அந்த நடைமுறை சாத்தியப்படவில்லை. தொடர்ச்சியாக அந்த மக்கள் அவர்களின் காணிகளுக்குச் சென்று பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருக்கின்றார்கள். எனவே இந்த உயரிய சபை அவர்களுக்கு ஒரு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணையை முன்வைக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரேரணை தொடர்பில் காணி அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை இந்த விடயத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US