அரசின் தீர்மானத்திற்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிரடி நடவடிக்கை!
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக 'மக்கள் பேரவை' (மகாஜன சபை) என்ற பெயரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் இந்த கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாவுல்லா, அசங்க நவரத்ன, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, வீரசுமண வீரசிங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜி.வீரசிங்க. டியூ குணசேகர ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுகதானவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எதிராக கூட்டறிக்கை வெளியிடவும், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் பெட்ரோலியம், மின்சார வாரியம், துறைமுகம் ஆகிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri