கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை
கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற இலாபம்
மீன் விலை அதிகரிப்பால் கோழி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதனால், கோழி இறைச்சியின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக வர்த்தகர்கள் முறையற்ற இலாபம் ஈட்டுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட பிரேரணை இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிலைமையைக் கட்டுப்படுத்த வர்த்தக அமைச்சுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |